விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை
விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை
ADDED : ஏப் 14, 2025 12:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம்.
45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயியான இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவார்.
இந்நிலையில் இன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம்.
45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பழனிவேல் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.