இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?
இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?
ADDED : மார் 19, 2024 03:57 AM

சென்னை : தமிழக காவல் துறையில், 1997ல் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வாகி, 2007 - 2008ல் பதவி உயர்வு பெற்ற, 57 இன்ஸ்பெக்டர்களுக்கு இரு தினங்களுக்கு முன் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அத்துடன், 37 டி.எஸ்.பி.,க் களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:
உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு பின், பதவி உயர்வு பட்டியலில் தகுதிவாய்ந்த 68 இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் இருந்தன.
ஆனால், பதவி உயர்வுக்கான அறிவிப்பில், 57 பேரின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 11 இன்ஸ்பெக்டர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
டி.ஜி.பி., அலுவலகத்தில் கோப்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர், காலி பணியிடங்களை மறைத்து, 57 இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டுமே டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு கிடைக்க வழி வகை செய்துள்ளார்.
இதன் பின்னணியில், 33 லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதாகவும் தெரியவருகிறது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

