ADDED : ஜன 29, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி, கே.கே.நகரை சேர்ந்தவர் நரசிம்மன், 71; ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது மொபைல் போனுக்கு சில வாரங்களுக்கு முன் பேசிய நபர், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால், சில நாட்களிலேயே இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளார்.
நம்பிய நரசிம்மன், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு தன் வங்கி கணக்கில் இருந்து, 40.45 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன்பின், அந்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்மன், திருச்சி மாநகர 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.