sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

/

அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

40


UPDATED : அக் 23, 2024 10:51 AM

ADDED : அக் 22, 2024 11:16 PM

Google News

UPDATED : அக் 23, 2024 10:51 AM ADDED : அக் 22, 2024 11:16 PM

40


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், 411 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, அமைச்சர் ராஜகண்ணப்பன், அவரின் மகன்கள் பெயரில் அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான ஆதாரங்களுடன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.



புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சென்னை பரங்கிமலையில் உள்ள நிலங்கள், சிலருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பின், அந்த நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

நடவடிக்கை இல்லை


எனினும், இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 36 'சர்வே' எண்களில், பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் பல புகார்கள் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, அரசு நிலங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், மீட்கப்படும் சிறிய மனைகளை ஒட்டியுள்ள ஒரு பெரிய நிலப்பகுதி மட்டும் நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை.

அந்த நிலத்தின் சர்வே எண்கள் 1352 மற்றும் 1353. அது, ஆலந்துார் மற்றும் நங்கநல்லுார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ளது. நிலத்தின் பரப்பு 4.52 ஏக்கர். சர்வே எண் 1353ல், 4 ஏக்கர் 31,378 சதுர அடி, சர்வே எண் 1352ல், 12,964 சதுர அடி உள்ளது. இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த் துறை பதிவேடு காட்டுகிறது. ஆனால், 1991 - 1996 கால கட்டத்தில், காதியா குடும்பத்திற்கு சொந்தமான, 'டெக்கான் பன் ஐலண்ட் அண்டு ஹோட்டல்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில், இந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது, கண்ணப்பன் அமைச்சராக இருந்தார். கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப்குமார் ஆகியோர், டெக்கான் பன் ஐலண்ட் அண்டு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில், 2015ல், ஆலந்துார் தாசில்தார், சென்னை தெற்கு இணை அலுவலக சார் - பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள்.

'இந்த நிலங்கள், தற்போது அரசு நிலங்கள். இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது. இதற்கு முன் யாராவது பத்திரப்பதிவு செய்திருந்தால், அதை ரத்து செய்து அறிக்கை அளிக்க வேண்டும்' என்று, கூறியுள்ளார். ஆனால், தாசில்தாரின் உத்தரவுக்கு முரணாக, மேற்படி நிறுவனத்தின் பெயரில் இருந்த, 4.52 ஏக்கர் நிலம், ராஜகண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் அவர்களுடையது தான் என்று சித்தரிக்கும் நோக்கில், 4.52 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை ஏழு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து, பின் அதை மீட்டது போல பதிவு செய்துள்ளனர்.

அப்படி அடமானம் வைக்கப்பட்ட நிறுவனமும், ராஜகண்ணப்பனின் மகன்களுக்கு சொந்தமானது தான். சொத்துரிமை ஆவணங்களை தயார் செய்வதற்காகவே, இந்த அடமான நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. தற்போது, சர்வே எண் 1352ல் உள்ள, 12,982 சதுரடி நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக, பல்லாவரம் தாசில்தார் பலகை வைத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை ஒட்டியே சர்வே எண் 1353ல் உள்ள, 4 ஏக்கர் 31,378 சதுரடி நிலம் தொடப்படவில்லை. அதில், ராஜகண்ணப்பனின் மகன்கள் செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக, விளம்பர பலகையும் வைத்துள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 411 கோடி ரூபாய்.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் செல்வாக்கு காரணமாகவே, அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த் துறை மீட்காமல் உள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மகன்கள் பெயரில் சொத்து சேர்த்துள்ளார் அமைச்சர். அந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அதை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

எங்கள் சொத்து


இதற்கிடையில், டெக்கான் ஐலேண்டு அண்டு ஹோட்டல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சரவணகுமார், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில், 4 ஏக்கர் 31,378 சதுரடி நிலம் மற்றும் கட்டடத்தை, எங்கள் நிறுவனம் முந்தைய நில உரிமையாளரிடம் இருந்து, 1991ல் வாங்கியது. 30 ஆண்டுகளுக்கு முன் கிரையம் பெற்ற தனிப்பட்ட சொத்தின் மீது, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மேலும், 2015ல் போடப்பட்ட உத்தரவு எதுவும், அதற்கு முந்தைய கிரையப் பத்திரத்தை கட்டுப்படுத்தாது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என, சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, தவறான தகவல்கள் தெரிவித்து, அவதுாறு பரப்பிய நபர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.

சட்டப்படி சந்திப்பேன்!

மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், தவறான தகவல்களை, பத்திரிகைகள் வழியாக பரப்பி வருகிறவர்களை, சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்.- ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சர்








      Dinamalar
      Follow us