ரேஷன் கார்டுக்கு ரூ.5000...! நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்
ரேஷன் கார்டுக்கு ரூ.5000...! நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்
UPDATED : டிச 02, 2024 04:05 PM
ADDED : டிச 02, 2024 03:54 PM

புதுச்சேரி: மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியாக ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.5000 வெள்ள நிவாரணத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. அதி கனமழையால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்பையும், சேதாரத்தையும் எதிர்கொண்டுள்ளனர். 4 பேர் மழையால் உயிரிழந்தனர். மழை, வெள்ளம் ஏற்படுத்திய சேதம் அதிகம் என்பதால் அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந் நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மழை, வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
கனமழையால் பலியான 4 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியையும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.40,000, ஆட்டிற்கு ரூ.20,000, படகு சேதம் அடைந்திருந்தால் ரூ.10,000, வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.20,000, விளை நிலம் ஹெக்டேருக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.