ADDED : செப் 23, 2026 06:31 AM

சென்னை: 'ஆசிய போட்டியில், தங்கம் வென்ற, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த, மதுரையை சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு, 75 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள, இந்திய மகளிர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள, மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் வாழ்த்துகள்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் சாதனையை பாராட்டி, தமிழக அரசு சார்பில், உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
கமலினியின் இந்த வெற்றி, தமிழக இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
