ADDED : நவ 12, 2025 01:56 AM
சென்னை: கலைஞர்கள், 525 பேருக்கு நேற்று, 85 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலைமாமணி விருது பெற்ற, நலிந்த நிலையில் வாழும், 10 கலைஞர் களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய்; அரிய கலைகள் சார்ந்த நுால்களை, தமிழில் பதிப்பித்த ஐந்து நுாலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்.
தமிழில் புதிய நாடகங்களை தயாரித்து மேடையேற்ற, ஐந்து கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய்; 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு, இசைக்கருவிகள், ஆடை, ஆபரணங்கள் வாங்க, தலா 10,000 ரூபாய் என, 525 கலைஞர்களுக்கு, மொத்தம், 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை, நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

