ரூ.1,000ஐ தாண்டியது கொசு வலை பல கடைகளில் இருப்பு இல்லை
ரூ.1,000ஐ தாண்டியது கொசு வலை பல கடைகளில் இருப்பு இல்லை
ADDED : செப் 22, 2026 01:18 AM
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால், வீட்டில் பயன்படுத்தக்கூடிய கொசு வலை விலை திடீரென உயர்ந்து உள்ளது.
தமிழகம் முழுதும் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக, கொசு வலைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், 'இன்ஸ்டாமார்ட், செப்டோ, ப்ளிங்கிட்' போன்ற முன்னணி வினியோக தளங்களில் விற்பனை அதிகரித்து, விலையும் உயர்ந்து உள்ளது.
வழக்கமாக, 'ஆன்லைன்' மற்றும் உள்ளூர் கடைகளில், 250 - 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொசு வலை தற்போது 1,000 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது.
சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கொசு வலைகள் 1,300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
ஆன்லைனில் பெரும்பாலான நேரங்களில் கொசு வலை இருப்பு இல்லை என்றே தகவல் வருகிறது; கடைகளிலும் பல இடங்களில் இருப்பு இல்லை; புதிதாக வர சில நாட்களாகும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
