ADDED : பிப் 23, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.கே.நகர் வித்யா காலனியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 57; பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரி. இவரது வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மதியம், போலீசார் நடத்திய சோதனையில் பவுடர் மற்றும் திரவ வடிவிலான 20 கிலோ பொருளை பறிமுதல் செய்து, ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தமீம் அன்சாரிக்கு சென்னையைச் சேர்ந்த அன்பு நெருங்கிய நண்பர். சமீபத்தில் மதுரை வந்த அன்பு, 'கெமிக்கல்' என்றுக்கூறி போதைப்பொருளை வைத்துவிட்டு சென்றதாக தமீம் அன்சாரி கூறுகிறார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் 'மெத்தம் பெட்டமைன்' மாதிரி தெரிகிறது. இதன் சர்வதேச மதிப்பு 1 கிலோ 5 கோடி ரூபாய். அன்புவை தேடி தனிப்படை சென்றுள்ளது.
இவ்வாறு கூறினர்.