10 நாடுகளுக்கு 5 மாதங்களில் ரூ.53,667 கோடி ஆடை ஏற்றுமதி
10 நாடுகளுக்கு 5 மாதங்களில் ரூ.53,667 கோடி ஆடை ஏற்றுமதி
ADDED : அக் 19, 2024 02:45 AM

திருப்பூர்:இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியாகும் 'டாப்-10' நாடுகளுக்கு, இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், 53,667 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
உலகளாவிய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், நம்நாடு நான்காவது இடத்தில் இருக்கிறது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை, ஐந்து மாத ஏற்றுமதியில், அமெரிக்கா மட்டும் 18,121 கோடி ரூபாய் பங்கு வகிக்கிறது.
பிரிட்டனுடன் 4,861 கோடி ரூபாய்; ஐக்கிய அரபு நாடுகளுடன் 3,789 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், சவுதி அரேபியா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகியன அடுத்தடுத்து 'டாப் -10' ஆடை இறக்குமதி நாடுகளாக உள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு நாடுகளும், ஆஸ்திரேலியாவும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதே காலகட்டத்தில், 50,097 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

