ADDED : மார் 02, 2024 12:39 AM
சென்னை:ஆர்.எஸ்.எஸ்.,சின் அகில பாரதிய பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழு கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 15, 16, 17 தேதிகளில் நடக்கவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, இணை பொதுச்செயலர் அருண்குமார், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்திலிருந்து 100 பேர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள், வரும் ஓராண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து, பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிரதமராக பதவியேற்ற பின், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்திற்கு மோடி செல்லவில்லை. எனவே, இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

