sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

/

முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

27


UPDATED : டிச 19, 2025 05:19 AM

ADDED : டிச 19, 2025 05:11 AM

Google News

27

UPDATED : டிச 19, 2025 05:19 AM ADDED : டிச 19, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோரக்பூர்: “சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் முஸ்லிம்கள் எதையும் இழக்க மாட்டார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சந்த் கபீரில் ஹிந்து சம்மேளனம் நடைபெற்றது.

இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று பேசியதாவது:


நம் மக்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் கடின உழைப்பு, உலகில் உள்ள அனைவராலும் வரவேற்கப்படுகிறது. நம் நாட்டின் கலாசாரத்தை பற்றி அறிய ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர். ரஷ்யாவில், தேவாலயங்களை கோவில்களாக மாற்ற அங்குள்ள மக்கள் அனுமதிக்கின்றனர்.

அமெரிக்காவில், ஹிந்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் கோவில்கள் கட்டப்படுகின்றன. அங்குள்ள மக்கள் சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணயாமம் செய்கிறார்கள். அவர்கள் சமஸ்கிருதத்தை கற்கின்றனர்.

ஜெர்மனியில் உள்ள பல பல்கலைகளில், சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகளாவிய தலைமையாக மாற வேண்டும்.

இந்த தொலைநோக்கு பார்வையை மனதில் வைத்து, ஹிந்து மதம், ஹிந்துத்வா மற்றும் ஹிந்து கலாசாரத்தில் சிறந்ததாக உள்ளவற்றை நம் வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவ்வாறு செய்ய வேண்டிய கடமை உள்ளது.

முஸ்லிம்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள்.

நம் முஸ்லிம் சகோதரர்கள், சூரிய நமஸ்காரம் செய்வதால் அவர்களுக்கு என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? சூரிய நமஸ்காரம் செய்வதால், அவர்கள் மசூதிக்கு செல்வது தடுக்கப்படும் என்பது அர்த்தமல்ல.

சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணயாமம் ஆகியவை உடல்நலம் சார்ந்த மற்றும் அறிவியல்பூர்வமான நடைமுறைகள். இதை செய்வதற்காக தொழுகை செய்வதை கைவிட வேண்டும் என நாங்கள் சொல்லமாட்டோம். மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம். ஆனால், மனித மதத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us