ADDED : செப் 11, 2011 11:37 PM
தூத்துக்குடி: ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதையடுத்து, தூத்துக்குடியிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு மேல், கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
தடையை மீறி பரமக்குடி செல்ல முயன்றதாக, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் நேற்று காலை, தூத்துக்குடி அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, கோவில்பட்டியில் அக்கட்சி தொண்டர்கள் மறியல் செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ் கண்ணாடியை, மர்ம நபர்கள், விளாத்திகுளம் அடுத்த கலைஞானபுரத்தில் கல்வீசி உடைத்தனர். பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடியிலிருந்து மாலை 6 மணிக்கு மேல், கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளில் போலீஸ் பாதுகாப்போடு பஸ்கள் இயக்கப்படுகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன.