ADDED : ஆக 24, 2011 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : கிராமங்களில் கட்டப்பட்டு வரும் அரசு வீடுகளை செப்., 15க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் ரூபாயில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில், பசுமை வீடு கட்டும் திட்டம் தொடங்கப்படும், இதை அரசே கட்டிக்கொடுக்கும், என்று அறிவித்தார். கடந்த ஆட்சியில், வீடு கட்ட ஆரம்பித்தவர்கள் பலர் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத நிலையில் தவித்தனர். இதனால் அரசு கட்டுமான பணி ஆரம்பித்த வீடுகளின் பணிகளை செப்.,15க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.