சபரிமலை சிறப்பு தரிசன திட்டம்: ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
சபரிமலை சிறப்பு தரிசன திட்டம்: ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2026 04:55 AM

சென்னை: ''மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, சபரிமலை சிறப்பு தரிசன திட்டத்தை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்,'' என, ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவர் முருகன் ஆர்.செல்வன் கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து, கேரள மாநிலம் பம்பை வரை சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். தனியார் பஸ்களில் அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்த வேண்டும்.
சபரிமலையில், தமிழக அரசு சார்பில் உதவி மையம் அமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சபரிமலை சென்று தரி சனம் செய்ய வசதியாக, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், இலவசமாக அல்லது கட்டண சலுகையுடன் சிறப்பு யாத்திரை திட்டம் அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் மனு வழங்க திட்டமிட்டு உள்ளோம்.
கூட்ட நெரிசல் காரணமாக, அய்யப்பனை தரிசனம் செய்ய முடியாமல், திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு பக்தரும் குறைந்தது 10 வினாடியாவது நின்று தரிசனம் செய்யும் வகையில், கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
