பாதுகாப்பான வாகன இயக்கம் ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் சாத்தியம்
பாதுகாப்பான வாகன இயக்கம் ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் சாத்தியம்
ADDED : செப் 29, 2024 02:57 AM
'சிக்ஸ் சென்ஸ் மொபிலிட்டி' என்பது டெல்லியை தளமாக கொண்ட 'டீப் டெக் ஸ்மார்ட் மொபிலிட்டி ஸ்டார்ட் அப்,' ஆகும். வாகனம் ஓட்டுவதை முன் எப்போதையும் விட பாதுகாப்பானதாக்க மாடுலர் IoT (Internet of Things) அடிப்படையிலான சாதனங்களை உபயோகித்து ஆர்ட்டிபிஷியல் இன்டெலிசென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகிய டெக்னாலஜியை பயன்படுத்தி வாகனம் ஓட்டுவதை முன்பை விட அதிக பாதுகாப்பாக ஆக்கி இருக்கிறது.
டில்லி ஐஐடி-ல், incubate செய்யப்பட்டு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MEITY) நிதியளிக்கப்பட்ட 'சிக்ஸ் சென்ஸ் மொபிலிட்டி', அதிநவீன பிளக்- அண்ட்- பிளே சாதனங்கள் மூலம் மேம்பட்ட வாகன டெலிமாடிக்ஸ் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
விபத்து கண்டறிதல்
இது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு விபத்து கண்டறிதல் தொழில்நுட்பம் ஆகும். இதனால், வானங்கள் மோதுவதை கண்டறிதல், தாக்கத்தின் தீவிரம் அளவிடல் மற்றும் விபத்தின் நடந்த இடத்தைக் குறிப்பது ஆகிவயற்றின் வாயிலாக, எஸ்.ஓ.எஸ்., (SOS) சேவைகளை தானாகவே அனுப்ப இயலும். இது அவசர காலங்களில் முக்கியமான நேரத்தைச் சேமிப்பதையும், உயிர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாகன கண்காணிப்பு
மதிப்புமிக்க வாகன சொத்துக்களைப் பாதுகாக்க இந்த நேர்த்தியான மற்றும் கச்சிதமான சாதனம் வாகனத்திற்கான நிகழ்நேர இருப்பிட கண்காணிப்பை வழங்க மேம்பட்ட GPS -ஐ பயன்படுத்துகிறது. துல்லியமாக, மொபைல் போன் அல்லது இணைய தளத்தைப் பயன்படுத்தி, வாகனம் எங்கு இருக்கிறது என்று கண்காணிக்க முடியும். மேலும், ஜியோபென்சிங் விழிப்பூட்டல், அதாவது உங்கள் வாகனம் ஒரு இடத்தை எப்போது சென்றடைந்தது, அங்கிருந்து எப்போது புறப்பட்டது என்ற விவரங்களையும் அறியலாம்.
டெலிமேட்டிக்ஸ் கட்டுப்பாடு
ஆட்டோமொபைல் துறையில் டெலிமேடிக் கண்ட்ரோல் யூனிட் (TCU) என்பது ஒரு வாகனத்தில் உள்ள உள்ளே பொதிக்கப்பட்ட அமைப்பாகும், இது செல்லுலார் நெட்வொர்க்கில் V2X தரநிலைகள் வழியாக வாகனத்தை கிளவுட் சேவைகள் அல்லது பிற வாகனங்களுடன் கம்பியில்லாமல் இணைக்கிறது.
மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன வாகன டெலிமேடிக்ஸ் கட்டுப்பாட்டு யூனிட், CAN (Controller Area Network) Protocol முறையில் இயங்கும் இந்த சாதனம் 2-, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களின் ஆற்றல்மிக்க தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு யூனிட் குறைந்த வேக 48 வோல்ட் மற்றும் அதிவேக 72 வோல்ட் பேட்டரி பேக்குகளுடன் தடையின்றி ஒருங்கிணைத்து, இணையற்ற adapdability திறனை வழங்குகிறது. நிகழ்நேர டேட்டா பெறுவதன் மூலம் மின்சார வாகனத்தின் செயல்திறன் பற்றிய விரிவான தகவல்களை பெற முடியும்.
இணையதளம்: www.sixsensemobility.com
விவரங்களுக்கு இ மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 - 51259 இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -