sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநெல்வேலி பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது!

/

திருநெல்வேலி பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது!

திருநெல்வேலி பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது!

திருநெல்வேலி பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது!

15


UPDATED : மார் 08, 2025 04:40 PM

ADDED : மார் 08, 2025 11:53 AM

Google News

UPDATED : மார் 08, 2025 04:40 PM ADDED : மார் 08, 2025 11:53 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் பா.விமலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



இவர் மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள்' என்ற ஆவணநூலை தமிழில் திறம்பட மொழிபெயர்த்ததற்காக இந்த உயரிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நளினி ஜமீலா - வாழ்க்கை போராட்டத்தின் குரல்

மலையாளத்தில் வெளியான 'எண்ட ஆண்கள்' (என் ஆண்கள்) என்பது நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகும். இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவரது போராட்டங்கள் போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்த நூல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

பா. விமலாவின் மொழிபெயர்ப்பு சிறப்பு

பா. விமலா, இந்த நூலை தனித்துவமான தமிழாக்கம் மூலம் விரிவாகவும், இலக்கிய நயத்துடனும் மொழிபெயர்த்துள்ளார். நூலின் உண்மையான உணர்வுகளை தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நேர்த்தியாக மொழிபெயர்த்ததற்காகவே அவர் சாகித்ய அகாடமி விருது பெறுகிறார்.

திருநெல்வேலிக்கான பெருமை

இந்த விருது திருநெல்வேலியின் கல்வி மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. தமிழ் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் விமலா பெற்றுள்ள இந்த அங்கீகாரம், தமிழக எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது.

சாகித்ய அகாடமியின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான 2024ம் ஆண்டு விருதுக்கு, திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பா.விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் ஜமீலா எழுதிய 'எண்ட ஆணுங்கள்' என்ற வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் உயர்ந்த சாதனை - ப. விமலா

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த பங்கிராஜ் மரியம்மாளின் இரண்டாவது மகளாக பிறந்த ப.விமலா (வயது 36), சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுள்ளார்.

சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநெறி கல்வி முறையில் பயின்றார். தொடர்ந்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் எம்பில் பட்டமும், அதன் பிறகு முனைவர் பட்டமும் பெற்றார்.

நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள இவர், மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள்' நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்தாண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையைக் கடந்து கல்விப் பயணத்தை தொடர்ந்த விமலா, சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தாய் மரியம்மாள், ஒரு காப்பகத்தில் வெந்நீர் சுமந்து முதியோர்களை பராமரிக்கும் வேலையில் கடின உழைப்புடன் குடும்பத்தினை வளர்த்தார்.

தொலைநெறி கல்வியில் பட்டம் பெற்றதால் விமலாவுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர்கள் நாச்சிமுத்து, அரவிந்தன், சந்திரசேகர் ஆகியோரின் உதவியால் தமிழ் மற்றும் மலையாளம் கலந்த இரு மொழி ஆய்வில் ஈடுபட முடிந்தது.

தன் பெற்றோர், சகோதரர்கள் தாங்கிய பாடுகள் தான் இவ்வளவு உயர்வு பெற காரணமென்று கூறிய அவர், தாம் பெற்ற விருதை தாயாருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன் என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us