ADDED : மார் 27, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 1,122 கோடி ரூபாயில், 3,100 பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 4,000 கோடி ரூபாயில் 10,545 கி.மீ., துாரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்னும் எட்டு கிராமங்கள் தான், சாலை வசதி இல்லாமல் உள்ளன. அவற்றுக்கு சாலை வசதி ஏற்படுத்த, வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வு குறித்து, முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.