போதை மருந்து விற்பனை : ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடிதம்
போதை மருந்து விற்பனை : ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடிதம்
ADDED : நவ 07, 2024 03:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: போதை மாத்திரை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகள் மீது நடவடிக்கை எடுத்து அதனை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் போதை மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.