உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 18, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
ஓமலுார்: வடகிழக்கு பருவ மழை, தமிழகம் முழுதும் பெய்து வருகிறது.
இதனால் நேற்று, சென்னையில் இருந்து சேலம் வர வேண்டிய, ‘இண்டிகோ’ பயணியர் விமானம், தற்காலிக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து முன்பதிவு செய்திருந்த, 70 பயணியருக்கும், முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதால், யாரும் சேலம் விமான நிலையத்துக்கு வரவில்லை. அதேநேரம், பெங்களூரு, ஹைதரபாத் செல்லும், ‘இண்டிகோ’ பயணியர் விமானம் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
