ADDED : ஆக 12, 2011 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் தங்கள் நிலத்தை அபகரித்ததாக,
அன்னை தெருவைச் சேர்ந்த அனிதா ராணி, டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்த பூசன் அரி,
பெரியார் நகர் விஜயகுமார் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சரளா
ஆகியோர், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், முன்னாள்
எம்.எல்.ஏ., ரங்கநாதன், அவரது கூட்டாளிகள் உட்பட 50 பேர் மீது, புகார்
அளித்தனர்.இதையடுத்து, ரங்கநாதன் உட்பட 50 பேர் மீது, ஒன்பது பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சிறையில் உள்ள ரங்கநாதன்,
கவுரிசங்கர் தவிர, மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

