sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : ஆக 12, 2011 02:09 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பட்டா பெயர் மாற்ற 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மன்னார்குடியை சேர்ந்தவர் அமித்சிவில்.

இவர் ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசிக்கிறார். இவர் திருக்கழுக்குன்றம் பூந்தண்டலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய கோரி, பூந்தண்டலம் வி.ஏ.ஓ., விடம் கடந்த மாதம் மனு செய்தார். வி.ஏ.ஓ., ஸ்ரீதர் பட்டாவை மாற்றித்தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக நடந்த பேரத்தில் 3,500 ரூபாய்க்கு வி.ஏ.ஓ., இறங்கி வந்தார். பெயர் மாற்ற ஒரு மாதமாக அலைகழிக்கப்பட்ட நிலையில், அமித் சிவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். வி.ஏ.ஓ.,விடம் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., ஸ்ரீதரை கையும் களவுமாக பிடித்தனர். அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us