sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொதுப்பாதை அபகரிப்பு தி.மு.க., நிர்வாகி கைது

/

பொதுப்பாதை அபகரிப்பு தி.மு.க., நிர்வாகி கைது

பொதுப்பாதை அபகரிப்பு தி.மு.க., நிர்வாகி கைது

பொதுப்பாதை அபகரிப்பு தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : ஆக 12, 2011 02:15 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:பொதுப் பாதையை ஆக்கிரமித்ததாக, கொடைக்கானல் கீழ் மலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

பழநி நேதாஜி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன், 65, கடந்த 2005ல், கொடைக்கானலில் 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். இந்நிலையில், கரும்வேலம்பட்டி செம்பரான்குளம் இடையில் உள்ள பொதுப் பாதை 300 மீட்டரை ஆக்கிரமித்து கதவு அமைத்தார். இதனால், கருவேலம்பட்டிக்கு செல்ல வேண்டிய 70 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் குணசேகரன் என்பவர், சந்திரசேகரன் எஸ்.பி., யிடம் புகார் அளித்தார். அதில், 'வடகவுஞ்சியில் ஏழு லட்சம் மதிப்புள்ள ஊராட்சி ஒன்றிய ரோட்டை ஆக்கிரமித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எனக்கு, சத்தியசீலன், மகன்கள் சரவணக்குமார், 36, செந்தில்குமார், 34, கொலை மிரட்டல் விடுத்தனர்,' என, கூறப்பட்டது. விசாரித்த இன்ஸ்பெக்டர் முருகன், மூவரையும் கைது செய்தார்.சத்தியசீலன், 2005ல், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராகவும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வலது கரமாகவும் இருந்தார். கடந்த 2006 ல், தி.மு.க., விற்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us