ADDED : ஆக 12, 2011 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:கடந்த மே 21, இரவு 10.30 மணிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க.,
அலுவலத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.
இது குறித்து நகர செயலர் சுரேஷ்,
போலீசில் புகார் செய்தார். இதேபோல, அன்று நள்ளிரவு அடைக்கலாபுரம்
ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில், மர்ம நபர்கள்
வெடிகுண்டு வீசினர். இதுகுறித்து, ராஜேஷ் புகார் செய்தார்.இந்த இரண்டு
சம்பவங்களுக்கும் தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன்
எம்.எல்.ஏ., மீது, மேலும் இருவழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு
செய்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக, இவரது ஆதரவாளர் ஆல்நாத்தும் கைது
செய்யப்பட்டார்.

