sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மொபைல் போனில் அழைத்து சீட்டாட்டம்மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

/

மொபைல் போனில் அழைத்து சீட்டாட்டம்மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

மொபைல் போனில் அழைத்து சீட்டாட்டம்மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

மொபைல் போனில் அழைத்து சீட்டாட்டம்மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது


ADDED : ஆக 12, 2011 02:17 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: ஆக. 12 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், மொபைல்போனில் சீட்டு விளையாட அழைத்து, பணமோசடியில் ஈடுபட்ட 4பேரை கைது செய்து,சாக்குமூடையில் பதுக்கிவைத்திருந்த ரூ.22லட்சத்தை போலீசார்மீட்டனர்.மதுரை மேலமாசிவீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 35. இவரை சிலர்சீட்டு விளையாடஅழைத்து பணம் பறித்தனர். பாலமுருகன் திருமங்கலம் டவுன் போலீசில்புகார் செய்தார்.

அதேபோல், தட்சிணாமூர்த்தி,அஞ்சாணை ஆகியோரும்புகார் செய்தனர்.இதை தொடர்ந்து,மாவட்ட எஸ்.பி., ஆஸ்ராகர்க் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்துசென்றனர். திருமங்கலம்-ராஜபாளையம் விலக்குஆறுகண் பாலம் அருகேசங்கையா கோவில்மரத்தடியில் சீட்டு விளையாடிய, விருதுநகர் முரளிகிருஷ்ணன், ராஜா, சுப்பையா, ஜெயச்சந்திரன்ஆகியோரிடம் விசாரணைநடத்தினர். இவர்கள் தான்சீட்டு விளையாடஅழைத்து பணம் மற்றும்நகை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மற்றும் 76பவுன் தங்க நகைகள்,பொலிரோ காரை பறிமுதல் செய்தனர். கார், தட்சிணாமூர்த்தியை ஏமாற்றிபறித்தது. போலீஸ்சோதனையின் போது, சீட்டாட்டகும்பலை சேர்ந்தவர்கள் சாக்கு பையில்பணத்தை கட்டி மரத்தடியில் வைத்திருந்தனர்.எப்படி நடக்கிறதுமோசடி : பண வசதிமற்றும் சீட்டு விளையாட்டில்ஆர்வமுள்ளவர்களைஇக்கும்பல் ஆசைவார்த்தை கூறி, மொபைல்போனில் அழைத்து,தோட்டம் அல்லது ஆள்நடமாட்டம் இல்லாதஇடத்திற்கு அழைத்துசென்று சீட்டு விளையாடுவர். பணம் காலியானதும்,பாதிக்கப்பட்டவரின் கார்அல்லது அணிந்திருக்கும்நகைகளை அடகுவாங்கிக் கொண்டு, அதேஇடத்தில் பணம் வழங்கி,மீண்டும் விளையாடவைத்து மோசடி செய்வர்.இப்படி பலரிடம் இக்கும்பல் மோசடியில்ஈடுபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us