UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:16 PM
சென்னை: தெற்கு ரயில்வேயில், 300 ரயில் நிலையங்களில், துாய்மைப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், ரயில்வேயில் அனைத்து மண்டலங்களில், செப்.,17 முதல், அக்.,1ம் தேதி, ரயில் நிலையங்கள், அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள், ரயில் பாதைகள், துாய்மை பணிகள், மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெற்கு ரயில்வேயில், 300 ரயில் நிலையங்களில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த கட்ட துாய்மை பணிகள், வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளன. முக்கிய ரயில் நிலையங்களை, ஆழமாக சுத்தம் செய்தல், தண்டவாள ஓரம் மற்றும் பழைய கழிவுகளை அகற்றுதல், தேவையற்ற சுவரொட்டிகள் மற்றும் குட்கா கறைகளை அகற்றுதல், சமையலறைகள் மற்றும் கழிப்பறைகளை தீவிரமாக, சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ரயில் கோட்டத்தில், துாய்மை இயக்க திட்டப்பணிகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் நேற்று தொடங்கி வைத்தார். கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் உட்பட பலர் பங்கேற்றனர். சென்னை ரயில் கோட்டதில், நேற்று மட்டும் 8,274 பேர் துாய்மைப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
