ADDED : மார் 06, 2024 03:42 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் பல கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கடந்த பிப்.,28ல் என்னை நேரில் சந்தித்து, கூட்டணி குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (மார்ச் 5) மத்திய அமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா, அரவிந்த் மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து மீண்டும் பேசினார்கள். 2வது கட்ட கூட்டணி பேச்சு சுமூகமாக நடந்தேறியது. நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட 3வது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பா.ஜ., உடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

