தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பதவி கேட்டு கடிதம் வழங்கினார் சரத்குமார்

 பதவி கேட்டு கடிதம் வழங்கினார் சரத்குமார்

 பதவி கேட்டு கடிதம் வழங்கினார் சரத்குமார்


ADDED : மார் 24, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த சரத்குமார், தன் கட்சியை பா.ஜ.,வில் இணைத்து இரண்டு ஆண்டுகளாகியும், அவருக்கு கட்சியில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, தன் ஆதரவாளர்களுடன், சென்னை, தி.நகரில், நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 2024 மார்ச் 12ல், பா.ஜ.,வில் இணைந்தோம். இதுவரை எனக்கும், மற்றவர்களுக்கும் பதவி வழங்கவில்லை என்ற ஆதங்கம் நிர்வாகிகளிடம் உள்ளது. எனக்கும் ஆதங்கம் இருக்கிறது.

'பதவி இருந்தால் தான், என்னால் செயல்பட முடியும். இது தொடர்பாக, கட்சியில் கடிதம் வழங்க உள்ளேன்' என்றார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று காலை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, பதவி கேட்டு வேண்டுகோள் கடிதத்தை சரத்குமார் வழங்கினார்.

பின் அவர் கூறுகையில், “வேண்டுகோள் கடிதம் கொடுத்தேன். 'நீங்கள் சொல்வது நியாயம் தான், பரிசீலனை செய்கிறேன்' என, நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

''என் ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்; தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கோவை செல்ல இருப்பதால், சென்னை வந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்திக்கவில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us