sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அரசியலில் அடுத்தகட்ட பயணம் இன்று முடிவெடுக்கிறார் சரத்குமார்

/

 அரசியலில் அடுத்தகட்ட பயணம் இன்று முடிவெடுக்கிறார் சரத்குமார்

 அரசியலில் அடுத்தகட்ட பயணம் இன்று முடிவெடுக்கிறார் சரத்குமார்

 அரசியலில் அடுத்தகட்ட பயணம் இன்று முடிவெடுக்கிறார் சரத்குமார்

3


ADDED : மார் 22, 2026 03:54 AM

Google News

ADDED : மார் 22, 2026 03:54 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில், சரத்குமார், தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ., வில் இணைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா, விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார்.

பா.ஜ.,வில் இணைந்த பின், சரத்குமாருக்கு, கட்சியில் தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

பா.ஜ.,வில் அவருடன் இணைந்த அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி எதுவும் தரவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பா.ஜ.,வில் முக்கியத்துவம் தரப்படாததால், தி.மு.க., வில் சரத்குமார் இணைய உள்ளதாக, தகவல் பரவியது. அதை சரத்குமார் மறுத்துள்ளார்.

இந்நிலையில், சரத்குமார், தன் ஆதரவாளர்கள், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோருடன், சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில், இன்று காலை 10:00 மணிக்கு, அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசியலில் அடுத்தகட்ட பயணம் குறித்து, சரத்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us