காங்கிரஸ் 'வார் ரூம்' தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம்
காங்கிரஸ் 'வார் ரூம்' தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம்
ADDED : ஜன 07, 2024 02:37 AM
சென்னை:வரும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய 'வார் ரூம்' தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'வரும் லோக்சபா தேர்தலுக்காக சசிகாந்த் செந்தில் தலைமையில் மத்திய வார் ரூமை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார். கோகுல் புடெய்ல், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோர், வார் ரூம் துணைத் தலைவர்களாக இருப்பர். தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார்.
பதவியை ராஜினாமா செய்து 2019ல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் சசிகாந்த் செந்தில் தலைமையிலான வார் ரூம், ஊடகங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது.