தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்

சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்

சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்


ADDED : ஜூலை 23, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஸ்ரீதர் 7வது முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ' குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

'அரசு, காவல் துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து, மற்ற போலீசார் சம்பவத்தின் போது செய்த செயல்கள் குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

'தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஜூலை 24ல் ஸ்ரீதர் ஆஜராக வேண்டும். அன்று சி.பி.ஐ., மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us