sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; மார்ச் 23ல் வெளியாகிறது தீர்ப்பு

/

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; மார்ச் 23ல் வெளியாகிறது தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; மார்ச் 23ல் வெளியாகிறது தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; மார்ச் 23ல் வெளியாகிறது தீர்ப்பு

4


ADDED : மார் 02, 2026 08:23 PM

Google News

4

ADDED : மார் 02, 2026 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவிக்கிறது.

2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தனர். போலீசார் கொடூரமாக தாக்கியதன் காரணமாக இருவரும் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில்அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பால கிருஷ்ணன், ராகு கணேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சுமார் 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில இந்த வழக்சின் விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் தமது தரப்பு வாதத்தை கோர்ட்டில் முன் வைத்தார். அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் வாதங்கள் மூன வைக்கப்பட்டன.

அனைத்துத் தரப்பு விசாரணைகள், வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், வழக்கின் தீர்ப்பை மார்ச். 23ம் தேதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us