ADDED : பிப் 17, 2025 04:15 AM

சென்னை: தி.மு.க.,வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்; அரசியல், சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த மாதம் 19ல், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுதும் நட்சத்திர பேச்சாளராக, தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
'தி.மு.க., தலைமை முடிவெடுத்து, கட்சியில் எந்த பதவி கொடுத்தாலும், அதை சந்தோஷமாக ஏற்பேன். தி.மு.க.,வுக்காக பதவி இல்லாவிட்டாலும் முழு மூச்சுடன் உழைப்பேன்' என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வந்தார் திவ்யா. இந்நிலையில், அவருக்கு தி.மு.க.,வில் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்குள், அவருக்கு தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

