ADDED : டிச 24, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'நா.த.க., சார்பில், மதுரையில் 'சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' வரும் 28ம் தேதி நடத்தப்படும்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில், வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், மதுரையில், 'சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' வரும் 28ம் தேதி நடைபெறும் என நா.த.க., அறிவித்துள்ளது.
இதுதவிர, மயிலாடுதுறையில், வரும் ஜன., 3ல் கூட்டம் நடக்கிறது. அதில், தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோர்கள் பலருடைய பெயர்களை பெரியார்களாக பட்டியலிட்டு, நா.த.க., தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் பேசுகிறார்.

