ADDED : ஜூலை 13, 2011 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பட விவகாரம் தொடர்பாக, தன்னை மிரட்டியதாக, சேலத்தைச் சேர்ந்த பட வினியோகஸ்தர் சண்முகவேல், 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி ஐயப்பன் மீது, கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் ஜாமினில் விடுவிக்கும்படி, சைதாப்பேட்டை, 23வது கோர்ட்டில் வழக்கறிஞர்கள் வாதாடினர். அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிநாத் ஆட்சேபனை தெரிவித்தார். அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.