எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டில் 'மேக்னம்' வார்த்தை நீக்கம்
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டில் 'மேக்னம்' வார்த்தை நீக்கம்
ADDED : டிச 24, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ். பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களின் பெயர்களில் இருந்த 'மேக்னம்' என்ற வார்த்தையை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டின் பெரும்பாலான கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களில் இருந்து மேக்னம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் குழப்பமடையாமல் இருக்கவும், திட்டத்தின் தன்மையை எளிதில் புரிந்துகொள்ளவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. திட்டங்களின் பெயர்கள் மட்டுமே மாறியுள்ளன என்றும்; முதலீட்டு நோக்கம், முதலீடு செய்யும் முறை அல்லது ரிஸ்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

