ADDED : பிப் 16, 2025 02:27 PM

சிவகங்கை: சிறப்பு வகுப்புக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் விபத்தில் பலியானது பெற்றோர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன், சுதர்சன்(18). காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புது பைக்கில் சென்றார். கல்லூரி சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சுதர்சன் மயக்கமடைந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும், வாகனம் வர தாமதமானது.
இதனால் அவர் அங்கிருந்தவர்கள் டூவிலரில் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுதர்சன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த, காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியை சேர்ந்த தீபக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

