ADDED : ஜன 13, 2026 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாளை முதல் 18ம் தேதி வரை, பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போகிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முதல்வருடனான ஆலோசனைக்கு பின், அனைத்து வகை பள்ளிகளுக்கும், நாளை முதல் வரும் 18ம் தேதி வரை, பள்ளிக்கல்வித் துறை விடுமுறை அறிவித்துள்ளது.

