PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உலகின் ஒல்லியான கார்
உலகின் மிக ஒல்லியான கார் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் 'பிளான் பான்டா'. சாதாரண கார்களை போல நான்கு சக்கரங்கள் உள்ளன. ஆனால் இதன் அகலம் வெறும் 50 செ.மீ., மட்டுமே. ஒருவர் மட்டுமே உட்கார்ந்து, அவரே ஓட்டிச் செல்லவும் வேண்டும். ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் கதவு உள்ளது. பின்புறம் சிறிய இடம் மட்டுமே உள்ளது. மின்சாரத்தில் இயங்கும். இதன் எடை 264 கிலோ. உயரம் 145 செ.மீ. நீளம் 340 செ.மீ. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் தான் செல்லும். இது விற்பனைக்கு அல்ல என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.