உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 24, 2026 12:54 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் தண்ணீர்
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'நாசா' 2020ல் அனுப்பிய 'பெர்சிவிரன்ஸ் ரோவர்', செவ்வாய் தரைப்பரப்பில் 'ஜெஜீரோ கிரேட்டர்' பகுதியில் 2021ல் இருந்து ஆய்வு செய்கிறது. பழங்கால உயிரினங்களின் தடயங்களை தேடுதல், மண், பாறை துகள், புவியியல், காலநிலையை ஆய்வு செய்வது இதன் முக்கிய பணி. இந்நிலையில் இந்த ரோவர் 'ஜெஜீரோ கிரேட்டர்' பகுதியில், ஒரு காலத்தில் நீர் அலைகள், ஏரிகள் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளது.
