அனைத்து பா.ஜ., வேட்பாளர்கள் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்: திமுக புகார்
அனைத்து பா.ஜ., வேட்பாளர்கள் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்: திமுக புகார்
UPDATED : ஏப் 07, 2024 01:37 PM
ADDED : ஏப் 07, 2024 01:35 PM

சென்னை: ‛‛ அனைத்து பா.ஜ., வேட்பாளர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்'' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் தி.மு.க., புகார் அளித்து உள்ளது.
பறிமுதல்
சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த, 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ., உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

சோதனை
திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
நெல்லையில் பறிமுதல்
இதனிடையே, நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறை விசாரணை

தி.மு.க., புகார்

என்னை டார்கெட் செய்கின்றனர்


