ADDED : ஜூலை 06, 2024 04:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர்.
பா.ம.க.,வைச் சேர்ந்தவர். கடலூர் நகர தலைவராக இருந்துள்ளார். இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல், சிவசங்கரை அரிவாளால் கடுமையாக வெட்டினர். தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.