சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!
சீர்காழி அருகே கடல் சீற்றம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன!
ADDED : நவ 28, 2024 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடலோர பாதுகாப்பு அரணாக விளங்கிய சவுக்கு காடுகளில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க கருங்கல் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். சவுக்கு காடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.