UPDATED : ஜன 30, 2024 03:00 AM
ADDED : ஜன 30, 2024 02:53 AM

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
கட்சி துவங்கியது முதல் இன்று வரை, தனித்தே எங்கள் பயணம் தொடருகிறது. நாங்கள் மக்களை மட்டும் தான் நம்புகிறோம். எங்களை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து, மற்றக் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
தி.மு.க., என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதியின் குடும்பச் சொத்து. வரும் 2026க்குப் பின், திராவிடக் கட்சிகள் ஒரு குச்சியாகக் கூட இருக்காது. அவர்கள் ஒத்தையடிப் பாதையில் செல்கின்றனர். என்னை எட்டு வழிச் சாலையில் அழைத்துச் செல்வது, தி.மு.க.,வும்; பா.ஜ.,வும் தான். என்னை பயங்கரவாதியாக மாற்றி விடக் கூடாது. ஜனநாயகவாதியாகவே வைத்துக் கொள்ளப் பாருங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகளைத் திறப்போம். நான் முச்சந்தியில் நிற்பதற்காக அல்ல; முதல்வர் ஆவதற்காகவே கட்சி துவங்கி உள்ளேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.
- நமது நிருபர் -