அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ -- மாணவியருக்கு 'சீட்' ஒதுக்கீடு
அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ -- மாணவியருக்கு 'சீட்' ஒதுக்கீடு
ADDED : ஆக 08, 2025 12:47 AM
சென்னை:இன்ஜினியரிங் இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகளில், மாணவ - மாணவியருக்கு 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, கவுன்சிலிங் குளறுபடியே காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
நிறைவு பெற்றது அண்ணா பல்கலையின் கீழ், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1.87 லட்சம் பி.இ., - பி.டெக் இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடந்தது.
அதில், பொதுப் பிரிவில் 26,719 மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,177 மாணவ - மாணவியர் என, மொத்தம் 28,896 மாணவ - மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இரண்டாம் சுற்று கவுன்சிலிங் கடந்த 26ல் துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. இதில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 9,633 மற்றும் பொதுப் பிரிவில் 52,694 மாணவ - மாணவியர் என, மொத்தம் 62,327 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இரண்டாம் சுற்று முடிவில் மொத்தம் 92,279 பி.இ., - பி.டெக் இடங்கள் நிரம்பின. இரண்டாம் சுற்றில், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒது க்கீடு செய்யப்பட்டு உள்ளது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழிப்புணர்வு இல்லை இது குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ''இன்ஜி., இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர் கூட தரமற்ற கல்லுாரிகளை தேர்வு செய்திருக்கின்றனர். 190 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற 166 மாணவ - மாணவியர் இரண்டாம் சுற்றில் பங்கேற்று சீட் பெற்றுள்ளனர்.
''இது, கல்லுாரியை தேர்வு செய்வதில் அவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததை காட்டுகிறது,'' என்றார்.
கல்வியாளர் அஸ்வின் கூறுகையில், ''அண்ணா பல்கலையின் அங்கீகாரம் இல்லா த ஐந்து கல்லுாரிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளன. அவற்றை மாணவ - மாணவியர் தேர்வு செய்ததால், 31 பேருக்கு அந்த கல்லுாரிகளில் 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
இ து கு றித்து விளக்கம் அளித்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள், 'அங்கீகாரமற்ற கல்லுாரியில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவ - மாணவியருக்கு, அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்றாற்போல, வேறு கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன' என்றனர்.

