sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துறைமுகங்களை சீரமைத்தாலே வருவாய் : வி.எச்.பி., செயலாளர் பேட்டி

/

துறைமுகங்களை சீரமைத்தாலே வருவாய் : வி.எச்.பி., செயலாளர் பேட்டி

துறைமுகங்களை சீரமைத்தாலே வருவாய் : வி.எச்.பி., செயலாளர் பேட்டி

துறைமுகங்களை சீரமைத்தாலே வருவாய் : வி.எச்.பி., செயலாளர் பேட்டி


ADDED : ஆக 13, 2011 01:27 AM

Google News

ADDED : ஆக 13, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ''சென்னையில் இருந்து குளச்சல் வரை உள்ள துறைமுகங்களை சீரமைத்தாலே, அரசுக்கு 540 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்'' என, விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் பி.எம்.நாகராஜன் கூறினார்.



ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: தொழிற்சாலைகளின் கழிவுநீர் கங்கையில் கலக்கிறது.கங்கை மாசுபடுவதை தடுக்கவேண்டும்.

கங்கையில் அணை கட்டலாம் என்கின்றனர். அணை சேதமடைந்தால் டில்லிதான் பாதிக்கும்.

பசுக்களை கொடூரமாக கொன்று ஏற்றுமதி செய்கின்றனர்.இயற்கை உரம் வேண்டும் என பிரசாரம் நடக்கிறது. மற்றொரு பக்கம் லாரிகளில் பசு கடத்தல் நடக்கிறது. பசுக்கள் கடத்துவதை கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பட்டா இடம்தான் கச்சத்தீவு. தற்போது இந்திய மீனவர்கள் அங்கு போகக்கூடாது என்கின்றனர். நமது கடற்படையிடம் நவீன கப்பல், ஹெலிகாப்டர் இருந்தும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. சென்னையில் இருந்து குளச்சல் வரை உள்ள துறைமுகங்களை சீரமைத்தாலே, கடல் வணிகத்தில் 540 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் ,என்றார்.








      Dinamalar
      Follow us