தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு

மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு

மதுரையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு


UPDATED : பிப் 03, 2025 10:14 AM

ADDED : பிப் 03, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2025 10:14 AM ADDED : பிப் 03, 2025 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப்.4) ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மதுரையில், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மலையை காக்க, நாளை (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

அனுமதி மறுப்பு:


இந்நிலையில், இந்த ஆர்ப்பாடம் நடத்துவதற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்,'' என மதுரை நகர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பிப்.,4 ல் ஹிந்து முன்னணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுத்த விவரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் ஹிந்து முன்னணி ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

144 தடை:


இந்நிலையில், அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளதால், இன்றும் நாளையும் (பிப்.,3, 4) மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us