தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்

'செக்சன் - 17 நில பிரச்னைக்கு தீர்வு வேண்டும்' : அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஊர்வலம்; ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 05, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 07:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் : கூடலுார் செக்சன்-17 நிலப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில், 34,476 ஏக்கர், செக்சன்-17 பிரிவு என அரசால் வகைப்படுத்தப்பட்ட, நிலப்பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கில், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'மக்கள் வாழ்ந்து வரும், 3,476 ஏக்கர் நிலத்தை, வருவாய் நிலமாக மாற்றி அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கவும்; மீதமுள்ள நிலத்தை, வன நிலமாக மாற்றவும்' அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

'இந்த மனு, கூடலுார் மக்களை பாதிக்கும்' என, வலியுறுத்தி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று, கூடலுாரில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில அரசை கண்டித்தும், மனுவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us