கார் ரேஸ் நடப்பதற்கு காரணம் சொல்கிறார் சீமான்; கேட்டுக்கங்க மக்களே!
கார் ரேஸ் நடப்பதற்கு காரணம் சொல்கிறார் சீமான்; கேட்டுக்கங்க மக்களே!
ADDED : செப் 01, 2024 01:25 PM

சென்னை: 'இத்தனை எதிர்ப்புக்கு பிறகும், சென்னையில் கார் ரேஸ் நடப்பதற்கு அதிகாரத்திமிர் தான் காரணம்,' என்று சென்னையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சென்னையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா சீமான் பேசியதாவது: கார் ரேஸ் நடத்தினால் முதலீடு வரும் என்றால் எதற்காக முதலீட்டுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்? இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அதிகாரத் திமிரில் கார் ரேஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் தனிநாடு கேட்கவில்லை. இதே நாடே என்னுடையது தான். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியென்றால் இந்த நாடே என்னுடையது.
பகைவர் ஓடு!!
பாசிஸ்ட், பிரிவினைவாதி என்று என்னை பார்த்துக் கூறும்போது பெருமை தான் ஏற்படுகிறது. இந்தியா என் நாடு, பாரத நாடே தமிழர் நாடு என்று இனி வரும் தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும். பாரத நாடு பைந்தமிழர் நாடு. பகைவர் அனைவரும் ஓடு. இந்தியாவை ஹிந்துக்கள் நாடு என்பது சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இந்த நிலத்தில் தாய்மொழியாக தமிழை கொண்டவர்கள் தான் வாழ்ந்தார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.