ADDED : நவ 05, 2024 09:55 AM

சென்னை: விஜய் கட்சியால் சீமானுக்கு அச்சம் வந்திருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி உள்ளது. சீமான் என்ன காரணத்தால் விமர்சனம் செய்கிறார் என்று அரசியல் கட்சியினர் பலரும் கருத்து சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில் சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கூறியதாவது: ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் போகப்போகத் தான்தெரியும். சீமானுக்கு ஒருமுறை ஓட்டளித்தால்மறுமுறை சிலர் ஓட்டளிப்பதில்லை. அதனால், விஜய் கட்சியால் சீமானுக்கு யதார்த்தமான அச்சம் வந்திருக்கும். சீமானுக்கு நிரந்தர ஓட்டு வங்கி இல்லாததால், இந்த அச்சம் வந்திருக்கலாம். இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
கமென்ட்: எது, எப்படியோ... விஜயை, 'ரவுண்டு' கட்டி திட்டுறதால, தி.மு.க.,வை திட்டுறதை சீமான் மறந்துட்டார்... அதை கவனிச்சீங்களா?
-நமது நிருபர்-